SuperTopAds

புதுக்குடியிருப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாக்காளர் அட்டைகள்

ஆசிரியர் - Editor II
புதுக்குடியிருப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாக்காளர் அட்டைகள்

முல்லைத்தீவு - விஸ்வமடு தபால் நிலையம் மூலம் விநியோகிக்கப்படவிருந்த 288 வாக்காளர் அட்டைகள், புதுக்குடியிருப்பு தோராவில் பகுதியில் உள்ள வீடொன்றில் காணப்பட்ட நிலையில் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கவேண்டிய ஒருதொகுதி வாக்குச்சீட்டுக்களே இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளன

விஸ்வமடு தபால் நிலையத்தின் தபால்காரர், இந்த வாக்காளர் அட்டைகளை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்துள்ளதாகவும், வாக்கு மோசடியில் ஈடுபட இவர்கள் வாக்காளர் அட்டைகளை வீட்டில் மறைத்து வைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்