SuperTopAds

பக்கவாட்டில் துளையிடும் பணி பலனளிக்குமா? என சந்தேகம். இறுதி முடிவை எடுக்க தயாராகும் மீட்பு குழு..! சோகமயமாக மக்கள்.

ஆசிரியர் - Editor I
பக்கவாட்டில் துளையிடும் பணி பலனளிக்குமா? என சந்தேகம். இறுதி முடிவை எடுக்க தயாராகும் மீட்பு குழு..! சோகமயமாக மக்கள்.

தமிழ்நாடு- திருச்சி மாவட்டம் நடுக்காட்டு பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் 4வது நாளாகவும் தொடரும் நிலையில், 

இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் தருணத்தில் இருக்கிறோம் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.

இன்று காலை ஊடகவியலாளா்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பாறைகள் தோண்டத் தோண்ட கடினமாக இருக்கின்றன. 

இதுவரை இவ்வளவு கடினமான பாறைகளைப் பார்ததே இல்லை. ஒரே மாதிரியான பாறைகளே தோண்டத் தோண்ட இருக்கின்றன. 

பாறைகளைத் தோண்டும் ரிக் இயந்திரத்தால் இனியும் முன்னேறிச் செல்ல இயலுமா எனத் தெரியவில்லை. ரிக் இயந்திரத்தால் தோண்டும் பணி பலனளிக்குமா 

என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் புதிய பிளேட் சென்னையில் இருந்து இன்னும் 1 மணி நேரத்தில் வந்து சேரும். 

முதல் ரிக் இயந்திரம் இத்தாலியைச் சேர்ந்தது. இரண்டாவது ரிக் இயந்திரம் ஜெர்மணியைச் சேர்ந்தது. 

இந்த இரண்டு ரிக் இயந்திரங்களும் செயல்பட்டே பாறைகளைத் தாண்டிச் செல்வது கடினமாக இருக்கிறது. அதனால், மாற்று வழி குறித்து 

துணை முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறோம். குழந்தை விழுந்து 4 நாட்களாகிவிட்ட நிலையில் மருத்துவர்களிடமும் ஆலோசனை செய்யவுள்ளோம். 

மீட்புப் பணியில் அனைத்து நிலைகளையும் ஆலோசித்து இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் சூழலில் இருக்கிறோம்.

குழந்தையின் பெற்றோரிடமும் பேசியிருக்கிறோம். நிலைமையை எடுத்துரைத்திருக்கிறோம். 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களை அழைத்திருக்கிறோம். 

பேரிடர் மீட்புக் குழுவினர், நிபுணர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையுடன் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். என்றார்.

அமைச்சருடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் இருந்தார்.