வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பில் மந்தம்!

ஆசிரியர் - Editor I
வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பில் மந்தம்!

யாழ்ப்­பா­ணம் மற்­றும் வன்­னி தேர்­தல் மாவட்­டங்­க­ளின் வாக்­கா­ளர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பு கடந்த ஆண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் குறைந்துள்ளது. 

யாழ்ப்­பா­ணம் தேர்­தல் மாவட்­டத்­தில் 2015ஆம் ஆண்டை விட 1016ஆம் ஆண்­டில் 8 ஆயி­ரத்து 438 வாக்­கா­ளர்­கள் அதி­க­ரித்­த­னர். ஆனால் இந்த ஆண்டு 7 ஆயி­ரத்து 134 வாக்­கா­ளர்­களே அதி­க­ரித்­துள்­ள­னர்.

வன்­னித் தேர்­தல் மாவட்­டத்­தில் 2016ஆம் ஆண்­டில் 5 ஆயி­ரத்து 910 வாக்­கா­ளர்­கள் அதி­க­ரித்­த­போ­தும் 2017ஆம் ஆண்­டில் 4 ஆயி­ரத்து 543 வாக்­கா­ளர்­களே அதி­க­ரித்­துள்­ள­னர். 

2017ஆம் ஆண்டு வாக்­கா­ளர் பெயர்ப் பட்­டி­ய­லில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 4 லட்­சத்து 68 ஆயி­ரத்து 482 பேரும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 86 ஆயி­ரத்து 731 பேரும், மன்­னார் மாவட்­டத்­தில் 86 ஆயி­ரத்து 94 பேரும், வவு­னியா மாவட்­டத்­தில் ஒரு லட்­சத்து 14 ஆயி­ரத்து 599 பேரும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 72 ஆயி­ரத்து 961 பேரும் வாக்­கா­ளர்­க­ளா­கப் பதிவு செய்­துள்­ள­னர். ஜன­வரி மாதம் 29ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் 2017ஆம் ஆண்டு வாக்­கா­ளர் பெயர்ப் பட்­டி­யலே பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு