SuperTopAds

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!

ஆசிரியர் - Editor II
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!

இந்தோனேசியா - ஜாவா தீவில் இன்று மதியம் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுகபூமி நகரிலிருந்து மேற்கே 104 கிலோமீட்டர் தூரத்தில், 33 கிலோமிட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, வடஅமெரிக்காவில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாநிலத்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

ரிக்டர் அளவுக்கோலின்படி 8.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடா நாட்டின் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.<