முன்னாள் காதலி மீது துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்தவரை சுட்டு கொன்ற பொலிஸாா்..! அவுஸ்ரேலியா சிட்டினியில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
முன்னாள் காதலி மீது துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்தவரை சுட்டு கொன்ற பொலிஸாா்..! அவுஸ்ரேலியா சிட்டினியில் சம்பவம்.

முன்னாள் காதலியின் வீட்டுக்குள் நுழைந்து காதலியையும், பிள்ளைகளையும் கொலை செய்வ தற்கு முயற்சித்த துப்பாக்கி தாாியை அவுஸ்ரேலிய பொலிஸாா் சுட்டு கொலை செய்துள்ளனா். 

சிட்னியில் நேற்றிரவு வீடொன்றின்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். 

டானியல் கிங் என்ற நபரையே காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.இரவு 8.45 மணியளவில் குறிப்பிட்ட நபர் மரயோங் பகுதியில் உள்ள 

வீடொன்றிற்கு கர்ப்பிணிப்பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் சென்மேரிஸ் காவல்துறை அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் அந்த நபர் பென்ரித் காவல்துறைக்கு சென்று துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொள்ள முயன்றவேளை காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். 

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவில் படம்பிடித்துள்ளனர்.நான் தெரிவிப்பது நகைச்சுவையல்ல இது இங்கு இடம்பெறுகின்றது எனது கண்முன்னாள் இடம்பெறுகின்றது 

என பெண்மணியொருவர் வீடியோவில் கதறுவதை கேட்க முடிகின்றது.குறிப்பிட்ட நபர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியை குறிபார்ப்பதையும் 

அவர்கள் அவரை சுட்டுக்கொல்வதையும் அவதானிக்க முடிகின்றது.கடவுளே கடவுளே என பெண்ணொருவர் வீடியோவில் கதறுகின்றார்.

இந்த சம்பவத்தில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.இதேவேளை மரயோங்கில் தாக்குதலிற்கு உள்ளான கர்ப்பிணிப்பெண் டானியல் கிங் 

கருக்கலைப்பு செய்யுமாறு வற்புறுத்தி வந்தார் என தெரிவித்துள்ளார். டானியல் கிங் எனது வயிற்றில் உள்ள அவரது பிள்ளையை கருக்கலைப்பு செய்யுமாறு கேட்டுக்கொண்டார் 

எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றிரவு வீட்டிற்கு வந்த அவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் எனவும் அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

நாங்கள் படுக்கையறையில் ஒழிந்திருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்ப்பிணியான தன்னுடன் கிங் கடந்த ஆறு மாதகாலமாக தொடர்பிலிருக்கவில்லை எனவும் 

அவர் தெரிவித்துள்ளார். எனது வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதில்லை என அவர் சண்டையிட்டதை தொடர்ந்து நாங்கள் பிரிந்தோம் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு