SuperTopAds

புதிய கருந்துளையை கண்டுபிடித்துள்ள நாசா!

ஆசிரியர் - Admin
புதிய கருந்துளையை கண்டுபிடித்துள்ள நாசா!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, வான்வெளியில் புதிய கருந்துளையைக் கண்டறிந்துள்ளது. பல்வேறு தொலைநோக்கிகள் மூலம் பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். 

அப்போது சூரியனின் அளவு கொண்ட புதிய கருந்துளையைக் கண்டறிந்துள்ளனர். இந்தக் கருந்துளை பூமியில் இருந்து 375 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதையும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

மேலும் இந்தக் கருந்துளையில் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் யூகித்துள்ளனர். முன்னதாக கருந்துளை என்பது கற்பனைக்கு எட்டாத ஈர்ப்பு விசை கொண்ட அண்ட வெளியின் ஒரு பகுதியாகும்.

வானியல் கோட்பாட்டின் படி முடிவில்லாத அடர்த்தி கொண்ட கருந்துளைக்குள் செல்லும் எந்தப் பொருளும் வெளியேற முடியாமல் அழிக்கப்பட்டு விடும். ஒவ்வொரு கருந்துளையும் பல சூரியக் குடும்பங்களை விழுங்கும் அளவிற்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் ஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.