நாமலில் திருமணத்தில் முன்னாள் அரசியல் கைதி!
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் அரசியல் கைதியும் அவரது மனைவியும் பங்கேற்றனர். பிணையில் வெளியில் வந்துள்ள அரசியல் கைதியான சவரிமுத்து லோகநாதன் என்பவரே இந்த திருமணத்தில் பங்கேற்றார்.
அவர்களை திருமணத்திற்கு அழைத்து வருவதற்கு பிரத்தியேக வாகனம் ஒன்றும் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறையில் இருந்த நேரத்தில் குறித்த அரசியல் கைதியின் நட்பு கிடைத்திருந்தது.
அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த நாமல், குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டதுடன் அவரது குடும்பத்தினருக்கு தனி வீடு ஒன்றையும் அமைத்துக் கொடுத்திருந்தார்.