SuperTopAds

போராளிக்கு சோதிடர் சொன்னது என்ன? நீடிக்கும் மர்மம்

ஆசிரியர் - Editor II
போராளிக்கு சோதிடர் சொன்னது என்ன? நீடிக்கும் மர்மம்

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவடைந்த போது, பல ஆயிரம் பொது மக்களும், போராளிகளும் காணாமல் போன நிலையில் இதுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

கடந்த எட்டு ஆண்டுகளாக தமது உறவுகளைத் தேடியும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தவிதமான பலனும் கிட்டவில்லை.

இதே போன்றதொரு நிலை தான் முன்னாள் போராளியொருவருக்கும் நடந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து போராளி ஒருவரின் எதிர்காலம் குறித்து சோதிடர் ஒருவரிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு குறித்த சோதிடர், 2008 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 30 திகதி வரை குறித்த போராளிக்கு உயிராபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதிலிருந்து மீளும் சந்தர்ப்பத்தில் அவர் சிறை செல்லவேண்டி ஏற்படும் என்றும் சோதிடர் குறிப்பிட்டிருந்தார்.

சோதிடரின் கணிப்பின்படி, போர் 2009ம் ஆண்டு உச்சகட்டத்தையடைந்தது. இதன் போது, பல போராளிகள் சரணடைந்தனர். பலர் போரின் போது வீரச்சாவை தழுவிக் கொண்டனர்.

போர் முடிந்த பின்னர், யார் உயிருடன் இருந்தார்கள், யார் யார் சரணடைந்தார்கள் என்கின்றன தகவல்கள் கிடைக்கவில்லை. அரசாங்கத் தகவல்களின்படி 11 ஆயிரத்திற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

ஆனாலும், இன்னமும் பல போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்னமும் தகவல்கள் இல்லை. குறித்த போராளி 2008ம் ஆண்டு வரை உயிருடன் இருந்ததாக தகவல்கள் உண்டு.

எனினும் 2009ம் ஆண்டிற்குப் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இப்பொழுதுவரை மர்மம் நீடித்துக் கொண்டேயிருக்கிறது.

இந்தப் போராளி போன்றே பல போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் மர்மமம் நீடித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல் ஏங்கித்தவிக்கிறார்கள் அவர் சார்ந்த உறவுகள்.<