SuperTopAds

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை மரணம்!

ஆசிரியர் - Admin
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 08.03.2017 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 912 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. தனது மகனை தேடி இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான நாகராசா நகுலேஸ்வரன் என்பவரை தேடி வந்த ஏழாம் வட்டாரம், சிவநகர், புதுகுடியிருப்பைச் சேர்ந்த சின்னையா நாகராசா என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அவரது இல்லத்தில் இன்று இடம்பெறறது.

தமது உறவுகளை தேடி காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்த 900 நாட்களில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 17 பெற்றோர்கள் உயிரிழந்துள்ளனர். வடக்கு கிழக்கில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.