யாழ்.கொக்குவில் பகுதியில் ஆவா குழு அட்டகாசம்..! உணவகம் அடித்து நொருக்கப்பட்டது, உாிமையாளருக்கு சரமாாி வாள்வெட்டு..

ஆசிரியர் - Editor
யாழ்.கொக்குவில் பகுதியில் ஆவா குழு அட்டகாசம்..! உணவகம் அடித்து நொருக்கப்பட்டது, உாிமையாளருக்கு சரமாாி வாள்வெட்டு..

கொக்குவில்- பூநாறி மரத்தடி பகுதியில் நேற்றய தினம் இரவு 9 மணியளவில் உணவகம் ஒன்றுக் குள் புகுந்த ஆவா குழு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

இந்த தாக்குதல் சம்பவத்தில் உணவகத்தின் உாிமையாளா் காயமடைந்துள்ளதுடன், உணவகத் திலிருந்த பொருட்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இதேவேளை உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, காங்கேசன்துறை வீதி கொக்குவில் - பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் நேற்று இரவு 9 மணியளவில் 

புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை, கண்ணாடி அலுமாரிகளை அடித்து நொருக்கியுள்ளது.மேலும் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீதும் 

அக் கும்பல் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் உணகவ உரிமையாளர் தலையில் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார், குறித்த உணவகத்திற்குச் சென்று தாக்குதல் நடத்திவிட்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் மறைந்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Radio