2 ஆயிரம் இந்திய மீனவா்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளிருந்து விரட்டியடிப்பு..!

ஆசிரியர் - Editor I
2 ஆயிரம் இந்திய மீனவா்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளிருந்து விரட்டியடிப்பு..!

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சுமாா் 2 ஆயிரம் தமிழக மீனவா்கள் கடற்படையினால் விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனா். 

கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 200 படகுகளில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் 

அவர்களைத் தாக்கி திருப்பி அனுப்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் எல்லையை கடந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில், 

அவர்கள் தாக்கப்பட்டதாகவும், இதன்போது அவர்களின் வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்களும் சோதமாக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு