கல்வியற் கல்லூரி டிப்ளோமா தாரிகள் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனத்தை அரசாங்கம் தாமதப்படுத்துவதற்கு ஏன்..?

ஆசிரியர் - Editor I
கல்வியற் கல்லூரி டிப்ளோமா தாரிகள் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனத்தை அரசாங்கம் தாமதப்படுத்துவதற்கு ஏன்..?

நாட்டின் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகின்ற வேளை. 2015 /2017 கல்வியாண்டில் பயிற்சியை நிறைவு செய்த கல்வித் கல்லூரி டிப்ளமோ தாரிகள் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்காது 

செப்டம்பர் மாதம் வரை கல்வி அமைச்சு இழுத்தடிப்பு செய்வதை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்து உள்ளார். 

2015 /2017 கல்வி ஆண்டிற்கு உரியவர்கள் 2013 ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்கள் ஆவர். இவர்கள் கல்வியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் போது 3 வருடங்கள் தாமதமாகவே இணைத்துக் கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

மேலும் 3 வருடத்தில் நிறைவு செய்ய வேண்டிய டிப்ளோமா பயிற்சியை இருமடங்காக 6 வருடங்கள் இழுத்தடிப்பு செய்ததின் பொறுப்பை கல்வி அமைச்சு பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அதனால் 2018 ஆம் ஆண்டு 

பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் காணப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஏற்பவே வெற்றிடங்கள் தெரிவு செய்யப்பட்டது .எனவே அப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி நாட்டின் 19 கல்வியல் கல்லூரி டிப்ளமோ தாரிகளுக்கு தாமதிக்காது 

உடனடியாக நியமனத்தை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்ட பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்,

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு