இன்னும் சில நிமிடங்கள் தானே..! தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்த சிறுமி..
கடுவாப்பிட்டிய தேவாலயத்தில் உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் உயிாிழந்த சிறுமி தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்ததாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் 260க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர். இதில் நீர்கொழும்பு கட்டுவாபிட்டி தேவாலயத்தில்
இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஒன்பது வயதான ரோச்சனாவும் கொல்லப்பட்டிருந்தார். இது குறித்து சிறுமியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,
“அப்பா இன்னும் கொஞ்ச நேரம் தானே... நான் இப்படியே இருக்கிறேன்..." என கடைசியாக கூறினாள். தனது மகள் சொன்னது போல் கொஞ்சம் நேரம் மட்டுமே உயிருடன் இருந்தாள்.
ஈஸ்டர் தினத்தன்று எனது மகளுக்கு புது ஆடை வாங்கிகொடுத்திருந்தேன். அதனை அணிந்துகொண்டே அவள் ஆலயத்திற்கு வந்திருந்தாள்.தேவாலயத்தில் அதிகளவான ஆட்கள் இருந்தார்கள்.
இந்நிலையில், தற்கொலை குண்டுதாரி இருந்த பக்கத்திற்கு நேர் எதிர் திசையில் நாங்கள் நின்றிருந்தோம். ஆலயத்தினுள் அமர்வதற்கு இடமிருக்கவில்லை. வழமை போன்றே பூஜைகளும் இடம்பெற்றன. எனக்கு முன்னால் மகள் இருந்தாள்.
நான் அவரை உட்காரச்சொன்னேன். எனினும், அவள் அமரவில்லை.பதிலாக “அப்பா இன்னும் கொஞ்ச நேரம் தானே... நான் இப்படியே இருக்கிறேன்...” என கூறினாள். அவள் அப்படி சொல்லி ஒரு நிமிடம் கூட இருக்கவில்லை.
குண்டு வெடித்ததில் உயிரிழந்து விட்டாள்.அவள் சொன்னது போல் கொஞ்சம் நேரம் மட்டுமே உயிருடன் இருந்தாள்” என சிறுமியின் தந்தை கண்ணீருடன் தெரிவித்திருந்தார். இதேவேளை,
தனது பாடசாலை பயிற்சி புத்தகத்தின் இறுதி பகுதியில் 14 முதல் 21 வரை இலக்கமிட்டிருந்த ரோச்சனா, 21ம் இலக்கத்தினை மாத்திரம் கிறுக்கி வைத்திருந்தாள்” என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இதனை நாங்கள் ஒரு மாதத்தின் பின்னரே கண்டிருந்தோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.