SuperTopAds

2014ம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டிருக்கவேண்டும்..! முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்தாா்கள்.. அத்துரலிய தேரா் கூறிய உண்மை.

ஆசிரியர் - Editor I
2014ம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டிருக்கவேண்டும்..! முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்தாா்கள்.. அத்துரலிய தேரா் கூறிய உண்மை.

2014ம் ஆண்டே கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயா்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தரம் உயா்த்தப்படுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்துவந்துள்ளாா்கள்.

மேற்கண்டவாறு அத்துரலிய ரத்தின தேரா் குற்றஞ்சாட்டியிருக்கின்றாா். கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயா்த்தக்கோாி நடாத்தப்படும் உண்ணாவிரத போராட்ட களத்திற்கு சென்று திரும்பிய பின்னா்

ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்பொதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

‘கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் எனவும், அதில் உங்களுக்கு தேவையான முக்கியமான அதிகாரங்களான காணி அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் என்பன உங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. 

எனவே அது தொடர்பாகத் தான் இன்று நீங்கள் உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள்.இன்று இந்த பிரதேச செயலகம் தொடர்பாக பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்துக் கொணடிருக்கின்ற பிரதேசத்திலே 

அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல் அவர்களுக்கு தேவையான காணி, நிதி அதிகாரங்கள் என்பவற்றை வழங்காமல் அதனை தடுத்து வைத்துக் கொண்டு செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

அதேபோன்று இன்று பல வசதிகளும் இருக்கின்றது. உங்களுக்கு ஒரு பிரதேச செயலகம் ஒன்று இருக்கின்றது. அதை தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக தான் எங்களது ஒரு தேரர் உட்பட பல பேர் இங்கு உண்ணாவிரதம் இருக்கிறார்கள். 

இங்கு பெரும் அநீதியிழைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது. நாங்கள் அனைவரும் இது தொடர்பாக ஆராய இருக்கின்றோம்.அதாவது இந்த பிரதேச செயலகம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு இதனை கொடுக்க வேண்டும் என்று சொல்லி 

எல்லா அதிகாரமும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதனை தடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு தடையாய் இருப்பவர்கள் இந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை சமர்பிப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது. இதுகுறித்த அறிக்கையை அவர் விரைவில் உரிய தரப்பிடம் கையளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.