வட்டுவாகல் சப்த கன்னிமாா் ஆலய வளாகத்திற்குள் முளைத்த விகாரை..!

ஆசிரியர் - Editor I
வட்டுவாகல் சப்த கன்னிமாா் ஆலய வளாகத்திற்குள் முளைத்த விகாரை..!

முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியில் உள்ள சப்த கன்னிமாா் ஆலய வளாகத்திற்குள் இராணுவத்தினா் விகாரை ஒன்றை அமைத்துள்ள நிலையில் ஆலய வழிபாடுகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனா். 

மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து இன்று வரை இந்த விடயம் தொடர்பாக பல தரப்பினரிடமும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் ஆலய கிரியைகளை செய்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற சப்த கன்னிமார் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க பன்னெடுங்கால 

பழமை வாய்ந்த ஆலயமாக காணப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆலயத்தினுடைய பாரம்பரிய முறைப்படியான கிரியைகளை செய்கின்ற ஆலய வளாகமானது யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் அபகரித்து குறித்த காணியில் பாரிய விகாரை 

ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பௌத்த மதத்தவர் கூட இல்லாத பழம்பெரும் ஆலய கிரிகைகள் இடம்பெறும் ஆலய வளாகத்தை இராணுவம் அபகரித்து பௌத்த விகாரை அமைத்துள்ளமையானது பல்வேறு நெருக்கடிகளையும் மக்கள் மத்தியில் 

விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயமாக ஆலய தரப்பு மற்றும் கிராம மட்ட அமைப்புக்களால் பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே இந்த விடயமாக உடனடியாக சம்மந்தப்படட தரப்புக்கள் 

தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு பெற்றுத்தரப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முல்லைத்தீவு மாவடட த்தின் பல பகுதிகளிலும் இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களில் விகாரைகளை இராணுவம் அமைக்க தவறுவதில்லை 

இவ்வாறும் முல்லைத்தீவில் பௌத்த மயமாக்கல் என்பது தொடர்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு