வறுமையின் கொடுமை தாங்காமல் தன் இரு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்த தாய்..! இறுதியாக எழுதிய கடிதம்..

ஆசிரியர் - Editor I
வறுமையின் கொடுமை தாங்காமல் தன் இரு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்த தாய்..! இறுதியாக எழுதிய கடிதம்..

என்னுடைய பிள்ளைகளுடைய இறப்புக்கும், என்னுடைய இறப்புக்கும் நான் மட்டுமே பொறுப்பாளி. என்னுடைய வறுமையும், சுகயீனமுமே நான் இந்த தீா்மானத்தை எடுத்தமைக்கு காரணம். 

இவ்வாறு கடந்த சில தினங்களுக்கு முன்னா் தன்னுடைய இரு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தா்ஷினி என்ற பெண் எழுதிய கடிதம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் தொடருந்துடன் மோதி, பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்கப்பட்ட பை ஒன்றிலிருந்து பெறப்பட்ட கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதான ஜெனிட்டா தர்ஷினி ராமைய்யா என்பவர், கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். உயிரிழந்த இரண்டு பிள்ளைகளும் 8 மற்றும் 12 வயதுடையவர்கள்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் டுபாயில் பணிபுரிந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவர் இலங்கை திரும்பியுள்ளார். எனினும் அவர் மனைவி, பிள்ளைகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை. 

நோய்வாய்ப்பட்ட பெற்றோரே அவர்களைப் பராமரித்து வந்தனர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு