SuperTopAds

ஒரு கோடியே 2லட்சத்து 11 ஆயிரத்து 300 செலவில் புனரமைக்கப்பட்ட மலசலகூடம் யாருக்கு..?

ஆசிரியர் - Editor I
ஒரு கோடியே 2லட்சத்து 11 ஆயிரத்து 300 செலவில் புனரமைக்கப்பட்ட மலசலகூடம் யாருக்கு..?

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடம் சுமாா் 1 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டபோதும் இரவில் பூட்டிவைககப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். 

மேலும் இரவில் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் மக்கள் பலத்த அசௌகாியங்களை சந்திக்கின்றனா். இந்நிலையில் பொது மலசலகூடம் மக்களுக்கா? தனிப்பட்ட தேவைக்கா?

என மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனா். இந்தப் பொது மலசல கூடம் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சால் ஒரு கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபா செலவிடப்பட்டு சீரமைக்கப்பட்டது.  

இவ்வளவு நிதியில் கட்டப்பட்ட இந்த மல சல கூடமானது மக்களின் பயன்பாட்டுக்கு உதவுவதில்லை. தற்ப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டின் டிப்போக்கள் 24 மணி நேரமும் 

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மக்களுக்கான மகத்தான சேவையை வழங்கி வருகின்றது. 

வெளிமாவட்டங்கள் மற்றும் உள்ளூரில் இருந்தும் அதிகளவிலான மக்கள் இந்த பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் பேருந்து நிலையத்தில் காணப்படுகின்ற மலசலகூடமானது தினமும் இரவு நேரங்களில் மூடப்படுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.