SuperTopAds

பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்படவில்லை! சிவ ஸ்ரீ சுரேஸ்வர சர்மா

ஆசிரியர் - Admin
பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்படவில்லை! சிவ ஸ்ரீ சுரேஸ்வர சர்மா

முதூர்- கிளிவெட்டி ஆலயத்தில் முஸ்லிம் நபர் ஒருவர் இருந்தாகவும் அவர் பஞ்சா அமிர்த்தத்திலே கருத்தடை மாத்திரைகள் போடப்பட்டு இந்து மக்களுக்கு அநீதி இழைத்தாக கூறப்படுகின்ற விடயம் தொடர்பாக கடந்த 13 ம் திகதி இந்து கலாசார அமைச்சருடைய அலுவலகத்தில் பல தரப்பினரும் அழைத்து வரப்பட்டு இது தொடர்பாக முழுமையாக ஆராயப்பட்டது. அப்போது இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. என்பது புலானானது.

எனவே முகப்புத்தகத்தில் பதிவிடுபவர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்கலாக இருந்தாலும் சரி இந்து அமைப்புக்களின் கருத்துக்களாக இருந்தாலும் சரி அது இந்து மதத்தினை பாதிக்கும் வகையில் அதனை அவமானப்படுத்தும் வகையில் பதிவிட கூடாது. என இந்து மஹா குருசபா தலைவரும் அகில இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளருமான சிவ ஸ்ரீ சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.

இன்று ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'குறித்த சந்திப்பின் போது முஸ்லிம் நபர் ஒருவர் இந்து ஆலயத்தில் உதவி குருவாக பணி புரிந்தார். என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அதனை தேடி பார்த்த போது குறித்த நபர் குருக்கள் பரம்பரையிலிருந்து வந்தவர் என்றும் அவர் இஸ்லாம் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்பதும் உமா மகேஸ்வரன் அவர்கள் உறுதிப்பட தெரிவித்தார்.

தயவு செய்து இந்து அமைப்புகள் என்றாலும் சரி,இந்து நபர்கள் என்றாலும் சரி எவராயினும் முகநூலில் பதிவிடும் இந்து மக்களுக்கு சமயத்துக்கு அவதூறு ஏற்படாத வகையில் தங்களது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர். நேற்று என்று மில்லாதவாறு அத்துரலியே ரத்தன தேரர் யாழ்பாணத்தில் சென்று, இந்துக்களும் பௌத்தமும் ஒன்றிணைய வேண்டும்.இந்து சயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் புதிதாக கண்டு பிடித்தது போல் தெரிவித்திருந்தார். அந்த கருத்தினை நாங்கள் வரவேற்கின்றோம்.

கடந்த முப்பது வருட காலத்தில் பேசாத இவர் கடந்த காலங்களில் இந்து ஆலயங்களை உடைக்கும் போது பேசாத இவர் இவ்வளவு காலமும் இந்து சமயத்தின் மீதும் மக்கள் மீதும் இல்லாது கரிசனை திடீரென எவ்வாறு ஏற்பட்டது? காலம் கடந்து தான் ஞானம் பிறந்ததா அவர் இந்து மக்களையும் பௌத்தர்களையும் இணைப்பதற்கு என்ன வேலைத்திட்டம் வைத்திருக்கிறார்.

அவர் தேராக இருந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதனால் யாழ்பாண மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அவர் இவ்வாறு பேசுகிறாரா? என்று எண்ணத்தோன்றுகிறது எனவே அவர்களின் பின்னால் செல்லும் இந்து மத அமைப்புக்கள் மிகவும் அவதானமாகவும் புத்திகூர்மையுடனும் செயற்பட வேண்டும். அவர் தலதா மாளிகைளில் உண்ணாவிரதம் இருந்த போது இந்து குருமார்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர். ஆனால் நேற்று வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பான அவருக்கு ஆதரவு வழங்கியவர்கள் கூட அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.