SuperTopAds

இ.போ.சபைக்கு புதிய பேருந்துகள் இலங்கைக்கு வந்தது..!

ஆசிரியர் - Editor I
இ.போ.சபைக்கு புதிய பேருந்துகள் இலங்கைக்கு வந்தது..!

இலங்கை போக்குவரத்து சபைக்காக கொள்வனவு செய்யப்பட்ட 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகளில் ஒரு தொகுதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

சீனாவின் Xiamen Kinglong United Automotive Industry நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 சொகுசு நவீன பஸ்களை ஏற்றி வரப்பட்ட கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதையடுத்து காலை கப்பலில் இருந்து 9 பஸ்கள் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளன.இந்த பஸ்களின் பெறுமதி 17.1 மில்லியன் ரூபாவாகும். 

இந்த சொகுசு 68 பஸ்களையும் விரைவாக போக்குவரத்து சேவையில் ஒன்றிணைப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

images- - Tharindu Vidanagama