கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இராணுவ வாகனம்மோதி 24 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor
இராணுவ வாகனம்மோதி 24 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு..!

கிளிநொச்சி- இராமநாதபுரம் பகுதியில் இராணுவ வாகனம் மோதி இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

இன்று மதியம் 12.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விமானப் படையின் ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதித்த பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஜீப்வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio
×