கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

றிஷாட், ஹிஷ்புல்லா, அஷாத்சாலிக்கு எதிராக 21 முறைப்பாடுகள்..! றிஷாட்டுக்கு எதிராகமட்டும் 11 முறைப்பாடுகள்..

ஆசிரியர் - Editor
றிஷாட், ஹிஷ்புல்லா, அஷாத்சாலிக்கு எதிராக 21 முறைப்பாடுகள்..! றிஷாட்டுக்கு எதிராகமட்டும் 11 முறைப்பாடுகள்..

முஸ்லிம் அரசியல்வாதிகள் 3 பேருக்கு எதிராக இதுவரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் ருவாண் குணசேகர கூறியுள்ளாா். 

இதில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 11 முறைப்பாடுகளும், முன்னாள் ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும், 

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 முறைப்பாடுகளும், ரிஷாத் பதியுதீனுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் எதிராக 

கூட்டாக முன்வைக்கப்பட்ட ஒரு முறைப்பாடும், மூவருக்கும் எதிராக கூட்டாக முன்வைக்கப்பட்ட இரு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. 

என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Radio
×