கம விதானை மீது மூா்க்கத்தனமான தாக்குதல்..! விவசாயி மீது முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
கம விதானை மீது மூா்க்கத்தனமான தாக்குதல்..! விவசாயி மீது முறைப்பாடு..

கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் சட்டவிரோதமாக நெற்செய்கையில் ஈடுபட்டவா்களின் தாக்குதலுக்குள்ளான கம விதானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

குறித்த சம்பவத்தில் முரசுமோட்டையை சேர்ந்த வீரசிங்கம் , வயது - 65 என்னும் கம விதானையாரே அடி காயங்களுடன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக் குளத்தின் கீழ் சட்டவிரோதமான விதைப்பில் ஈடுபட்டவர்களிற்கு எதிர் வரும் 5 ஆண்டுகளிற்கு காலபோக நெற்செய்கையின்போது உர மானியம் நிறுத்தப்படும்.

என அறிவிக்கப்பட்ட நிலையில் நீர் முகாமையில் ஈடுபட்டிருந்த சமயம் குறித்த கம விதானை மீது சட்டவிரோத வயல் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் தாக்குலை மேற்கொண்டுள்ளார்.

 தாக்குதலிற்கு இலக்கான கம விதானை தன் மீது தாக்குதல் மேற்கொண்ட விவசாயி தொடர்பில் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதோடு கமநல சேவை உதவி ஆணையாளர் மற்றும் நீர்ப்பாசணத் பொறியியலாளர் 

ஆகியோருக்கும் தகவல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு