கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

திறக்கப்பட்டது கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயம்..! நாளை திருப்பலி பூஜை..

ஆசிரியர் - Editor
திறக்கப்பட்டது கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயம்..! நாளை திருப்பலி பூஜை..

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தொடா்ந்து பூட்டப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியாா் ஆலயம் புனரமைக்கப்பட்டு பக்தா்களின் வழிபாட்டுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் பெரும் சேதங்களுக்கு உள்ளானது.

தேவாலயத்தை சீரமைக்கும் பணிகளை கடற்படையினர் முன்னெடுத்திருந்தனர். சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு வழிபாடுகளுடன் புனித அந்தோனியார் ஆலயம் திறந்துவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா நாளை ஆரம்பிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பலி பூஜை, கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

Radio
×