கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இலங்கை கேட்பதை வழங்க அமொிக்கா தயாா்..! இந்த விடயங்களுக்காக மட்டும் கேட்கவேண்டும்..

ஆசிரியர் - Editor
இலங்கை கேட்பதை வழங்க அமொிக்கா தயாா்..! இந்த விடயங்களுக்காக மட்டும் கேட்கவேண்டும்..

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் கேட்கும் சகல உதவிகளையும் வழங்க அமொிக்கா தயாராகவே இருக்கின்றது. 

அமெரிக்கா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எலைனா பீ.டெப்லிட்ஸ் உறுதியளித்தாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.  

தூதுவர் எலைனா பீ.டெப்லிட்சுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமைச்சின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது நாடடின் பாதுகாப்பு விடயங்கள், பொருளாதாரம்,

நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கும் போது அமைச்சர் கூறியதாவது அமெரிக்காவின் தூதுவர் எலைனாவுடனான சந்திப்பில் 

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகள், பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், நாட்டின் தற்போதைய சமத்துவம் மற்றும் நல்லிணக்க 

செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று அவற்றை செயற்படுத்தவதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். 

 மேலும் இஸ்லாமிய அரச இயக்க பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கான உதவிகளை பெற்றுக்கொடுக்க அமெரிக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. அமெரிக்காவின் தேவைக்காக அரசாங்கம் செயற்பட்டு வருவதாக 

எதிர்தரப்பினர் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகினறனர்.ஆயினும் நாட்டின் பாதுகாப்புக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவும் இலங்கை அரசாங்கம் கேட்கும் உதவிகள் அனைத்தையும் வழங்க 

அமெரிக்கா அரசாங்கம் தயாராகவே உள்ளது என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Radio
×