கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஜனாதிபதி தலையால் நடந்தாலும் தொிவுக்குழு விசாரணைகள் தொடரும்..! சுமந்திரன் சாட்டை..

ஆசிரியர் - Editor
ஜனாதிபதி தலையால் நடந்தாலும் தொிவுக்குழு விசாரணைகள் தொடரும்..! சுமந்திரன் சாட்டை..

ஏப்ரல் 21 குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுகுழு மூன்று மாதங்கள் தொடந்து விசாரணை நடத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தெரிவுகுழு விசாரணை நடத்தினால் அமைச்சரவை கூட்டத்தை நடத்த போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார் இது குறித்து தனியாா் வானொலி ஊடகம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில் குறித்த நாடாளுமன்ற தெரிவுகுழு 3 மாதங்கள் குறிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட நிலையில் அந்த காலம் வரை விசாரணை தொடர்ந்தும் இடம்பெறும். 

இந்த தெரிவு குழுவை நாடாளுமன்றம் கலைத்தாலே தவிர வேறு எவராலும் கலைக்கமுடியாது. இதேவைளை பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு அரசியல் யாப்பில் இடமிருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

Radio
×