புலிகளால் தமிழா்களுக்கும், ஜே.வி.பியினால் சிங்களவா்களுக்கும் நடந்தது.. முஸ்லிம்களுக்கும் நடந்தே தீரும்..! சீறினாா் மஹிந்த.

ஆசிரியர் - Editor I
புலிகளால் தமிழா்களுக்கும், ஜே.வி.பியினால் சிங்களவா்களுக்கும் நடந்தது.. முஸ்லிம்களுக்கும் நடந்தே தீரும்..! சீறினாா் மஹிந்த.

சிங்களத்தில் நல்லிணக்கம் பற்றிபேசும் முஸ்லிம் தலைவா்கள் தமிழில் இனவாதம் பேசுகிறாா்கள் என கூறியிருக்கும் எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ, முஸ்லிம் தலைவா்களின் பதவி விலகல் ஒரு மோசடி எனவும் சாடியுள்ளாா். 

விஜேராம மாவத்தையில் உள்ளது தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். 1980 ஆம் ஆண்டுகளின் தனியான முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதால், 

அவர்கள் அரசியல் துறையில் தனியான பயணத்தை ஆரம்பித்தனர். அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியது, முஸ்லிம் சமூகத்தை ஏனைய சமூகங்களிடம் இருந்து தூர விலக்கி வைக்கும் 

ஒரு மோசடியான நடவடிக்கை. பதவி விலகியமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னிடம் விளக்கிய போது நான் அவர்களை கண்டித்தேன். 1980 ஆம் ஆண்டுகளில் எம்.எச்.எம். அஷ்ரப் முதல் முறையாக 

முஸ்லிம் அரசியல் கட்சியை தொடங்கினார். சமய அடிப்படையில் அரசியல் கட்சியை ஆரம்பித்தது தவறு என்பதை பின்னர் உணர்ந்த அவர், இறுதி காலத்தில் தேசிய ஐக்கிய முன்னணி என்ற அனைத்து இனத்தவர்களுக்குமான கட்சியை ஆரம்பித்தார்.

எனினும் அவரது மரணத்தின் பின்னர் அந்த கட்சியின் வளர்ச்சி குறைந்து போனது. முஸ்லிம்களின் தனித்த அரசியல் மேலும் அதிகரித்தது. முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களின் வாக்குகளில் தங்கியிருப்பதால், 

அவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள அடிப்படைவாதிகள் அவசியம். கடந்த காலங்களில் நாட்டின் முஸ்லிம் அடிப்படைவாதம் வளர்ச்சியடைந்த போது முஸ்லிம் அரசியல் தலைமை அதனை எதிர்க்கவில்லை. 

முஸ்லிம் அரசியல் தலைமைகள் அடிப்படைவாதத்திற்கு அஞ்சினர். முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்களத்தில் நல்லிணக்கம் பற்றி பேசி விட்டு, தமிழில் இனவாதம் பேசுகின்றனர் என்ற பெரிய குற்றச்சாட்டு இருக்கின்றது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அடிப்படைவாதம் இன்று நேற்று பிரபலமாகவில்லை. பல வருடங்களாக வாத விவாதங்கள், அடிதடி, பள்ளிவாசல்கள் தீவைப்பு, வீடுகள் தீவைப்பு, கொலைகள் இவை அனைத்துடன் அடிப்படைவாதம் பரவியது.

இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது அரசியல் இருப்புக்காக அடிப்படைவாதிகளுக்கு அனுசரணை வழங்கி, வளர இடமளித்தனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர்,

 இப்படி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என சில முஸ்லிம் தலைவர்கள் கூற ஆரம்பித்தனர்.

எனினும் தற்போது நடந்துள்ளதற்கு நாம் தீர்வு காண வேண்டும்.பயங்கரவாதத்தை நாட்டின் ஏனைய சமூகங்கள் பொறுக்காது. பயங்கரவாதத்தை எந்த முறையிலாவது அழிக்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சிக்காலங்களில் சிங்களவர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்களவர்களின் வீடுகள், விகாரைகள் சோதனையிடப்பட்டன. புலிகளின் பயங்கரவாதம் காரணமாக தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்களின் வீடுகள், ஆலயங்கள் சோதனையிடப்பட்டன. முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை அடக்க வேண்டுமாயின் கட்டாயம் முஸ்லிம் நபர்கள் கைது செய்யப்படுவார்கள். 

முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்படும். இவற்றை செய்யாது, அடிப்படைவாதத்தினால், ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்பது பொய்யானது.

மத பயங்கரவாதம் எமக்கு புதிதாக இருந்தாலும் உலகில் முஸ்லிம் நாடுகளுக்கு அது பழக்கமான ஒன்று. உலகில் உள்ள முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் நடுநிலையானவர்கள்.

இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து ஓமான், துபாய், மொரோக்கோ வரையான நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் எம்மை போன்று சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய மதங்களை பின்பற்றும் மக்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். அந்நாடுகளில் ஏனைய மதத்தவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு மட்டுமல்ல,முழு உலக முஸ்லிம்களுக்கும் பெரிய தலைவலியாக இந்த அடிப்படைவாத பயங்கரவாதம் அமைந்துள்ளது.

முஸ்லிம் நாடுகளை அழிக்க ஏகாதிபத்திய நாடுகள் இந்த முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாதத்தை பயன்படுத்துகின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா,யேமன் போன்ற நன்றாக இருந்த முஸ்லிம் நாடுகள் அழிக்கப்பட்டு விட்டன. 

தற்போது இலங்கைக்கு வந்துள்ள அடிப்படைவாத பயங்கரவாதம், இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பே தவிர நன்மையானது அல்ல எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு