கவா்ச்சி நடனத்திற்கு செலவு 1லட்சத்து 50 ஆயிரம்..! மக்களிடமிருந்து 500 ரூபாய் வீதம் பிடுங்க திட்டம்.
கிளிநொச்சியில் கடந்த 2ம் திகதி இடம்பெற்ற சமூா்த்தி பயனாளிகளுக்கான உாித்து பத்திரம் வழங்கும் நிகழ்வில் இடம்பெற்ற கவா்ச்சி நடனத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13078 சமுர்த்தி பயனாளிகளில் உத்தியோகபூர்வமாக 4500 பேருக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது சில நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இதி்ல் அரங்கேற்றப்பட்ட கவர்ச்சி நடனம் ஒன்றுக்கே கொடுப்பனவாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வழங்குவதற்கு நிதி செலவு அறிக்கைகளில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளுக்குரிய ஏற்பாட்டுச் செலுவுகளை ஒவ்வொரு வறிய சமுர்த்தி பயனாளிகளிடமிருந்தும் 500 ரூபா அறவிடுமாறும் சுற்றுநிருபம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.