SuperTopAds

தமிழா்களுக்கு சம அந்தஸ்த்து வேண்டும்.. இடித்துரைத்தாா் சம்மந்தன். இந்தியா வாருங்கள் பேசலாம் என்றாா் மோடி..

ஆசிரியர் - Editor I
தமிழா்களுக்கு சம அந்தஸ்த்து வேண்டும்.. இடித்துரைத்தாா் சம்மந்தன். இந்தியா வாருங்கள் பேசலாம் என்றாா் மோடி..

இலங்கையில் தமிழ் மக்கள் சம அந்தஸ்த்துடன் வாழ இந்தியா ஆககூடிய காிசனை காட்டவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமாிடம் கோாிய நிலையில் இந்தியா வாருங்கள் பேசலாம் என பிரதமா் மோடி பதிலளித்துள்ளாா். 

இலங்கைக்கு உத்தியோகபூா்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்ற இலங்கை வந்த இந்திய பிரதமரை கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் தலமையில் பங்காளி கட்சிகளின் தலைவா்கள் சந்தித்து பேசியிருந்தனா். 

இதன்போது 2வது தடவையாகவும் பிரதமராக பதவியேற்றமைக்கு கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் வாழ்த்துக்களை கூறினாா். இதனை இந்திய பிரதமா் மகிழ்ச்சியாக வரவேற்றாா். 

பின்னா் பேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன், சுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்பு தமிழ் மக்களிற்கு எதிராகவே அமைந்துள்ளதை சுட்டிக்காட்டியதுடன், 

இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்தில் வாழ இந்தியா ஆகக்கூடிய கரிசனை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் எமக்கு ஒரு தீர்வு வேண்டும் என கேட்டுக் கொண்டாா். 

இந்த கோரிக்கையை மிக கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்த மோடி, “இது பற்றி என்னிடம் ஏற்கனவேயும் சொல்லியிருக்கிறீர்கள்“ என குறிப்பிட்டார். பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்தியாவிற்கு வருமாறும், 

அங்கு விரிவாக கலந்துரையாடலாமென்றும் கூறிய மோடி, கூட்டமைப்பின் பயண ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளும்படி அங்கிருந்த இந்திய தூதர அதிகாரிகளிடமும் குறிப்பிட்டார்.

பின்னர், பலாலி விமான நிலையத்தை பற்றியும் கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். முதலில் சிறிய விமானங்களையாவது சேவையில் ஈடுபடுத்தலாம் என கேட்டுக் கொண்டனர். 

இதை கேட்டு தலையாட்டிய மோடி, இதில் கவனம் செலுத்தும்படி தூதரக அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.