கொட்டும் மழைக்கு மத்தியில் இலங்கை வந்தாா் மோடி..! பல்தரப்பு சந்திப்பு. ஜனாதிபதி புகழாரம்..

ஆசிரியர் - Editor I
கொட்டும் மழைக்கு மத்தியில் இலங்கை வந்தாா் மோடி..! பல்தரப்பு சந்திப்பு. ஜனாதிபதி புகழாரம்..

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்தித்து கலந்துரையாடினார்.

உத்தியோகபூர்வமாக வரவேற்ற ஜனாதிபதி சந்திப்பின் போது இந்திய பிரதமருக்கு சமாதிசிலை புத்தர் சிலையொன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தியான முத்திரை என அழைக்கப்படும், யோக நிலையில் புத்தர் அமர்ந்திருக்கும் வகையில் இந்த புத்தர் சிலை செதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தர் நிலை வெண்தேக்கு மரத்தில், கையால் செதுக்கப்பட்டதாகும். இதனைச் செதுக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அழைப்பை ஏற்று வருகைதந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கு வருகை தந்தமைக்கு நன்றி, இந்த விஜயத்தின் மூலம் நீங்கள் எம்முடைய உண்மையான நண்பன் என நிரூபிக்கிறீர்கள். இலங்கை தொடர்பான உங்கள் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு