இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம் உருவாகும் நிலை..!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம் உருவாகும் நிலை..!

அமைச்சரவை கூட்டங்களை புறக்கணிக்கபோவதாக ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில் நாட்டில் மீண்டும் அரசியல் குழப்ப நிலை உருவாகும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது. 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்தும் வரை அமைச்சரவைக் கூட்டங்களை பகிஷ்கரிக்க ஜனாதிபதி சிறிசேன தீர்மானித்துள்ளார்.

நேற்றிரவு அவசரமாக கூட்டிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 5 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவது, விஜேதாச ராஜபக்ச, 

சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், 

அதன் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார். அமைச்சரவைக் கூட்டத்தில் சற்று கோபமாக பேசியுள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் மீது கடுமையான விமர்சனங்களை 

முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவைக் கூட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரியவும் அழைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் 

ஒரு வார்த்தையை கூட பேசிக்கொள்ளாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு