இலங்கை விஜயத்திற்கு முன் குருவாயூா் சென்ற மோடி தன் எடைக்கு நிகரான பூக்களை தானமாக வழங்கினாா்..!

ஆசிரியர் - Editor I
இலங்கை விஜயத்திற்கு முன் குருவாயூா் சென்ற மோடி தன் எடைக்கு நிகரான பூக்களை தானமாக வழங்கினாா்..!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி முதல் பயணமாக இன்று மாலைதீவு செல்லவுள்ளதுடன் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார்

இந்நிலையில் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் சிறீ கிருஷ்ணா கோவிலில் இன்று காலை வழிபாடு செய்தார். அவர் எடைக்கு எடை 112 கிலோ தாமரைப் பூக்களை துலாபாரம் கொடுத்தார்.

கோவிலுக்குள் பிரதமர் மோடி 20 நிமிடங்கள் இருந்தார். கோவில் நிர்வாகிகள் சார்பில் ரூ 450 கோடி செலவில் பல்வேறு அபிவிருத்திக்கான மனுவை பிரதமரிடம் அளித்தனர்.

தனது டுவிட்டரில் பிரதமர் மோடி குருவாயூர் கோவில் தெய்வீகமானது மற்றும் அற்புதமானது. இந்த பிரம்மாண்டமான கோவிலில் இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்தேன் என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

நாளை காலை 11 மணியில் இருந்து 12 மணிவரை இலங்கையில் ஜனாதிபதி பிரதமர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இவரது வருகையால் இவர் பயணிக்கும் வீதிகள் மூடப்பட்டு 

மாற்று மாற்றுபாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு