வெங்காய மூடையால் மூச்சு திணறிய பஸ் பயணிகள்- இது தான் நடந்தது..
யாழ்ப்பாணம் அக்கரைப்பற்று வழியே இரவு 9.30 மணியவில் பயணித்த பேருந்தில் ஏற்றப்பட்ட வெங்காய மூடைகளால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டதாக குற்றஞ்சாட்டினர்.
ஞாயிற்றுக்கிழமை (2) கிளிநொச்சி பஸ் டிப்போவிற்கு சொந்தமான பேருந்தில் அதிகளவான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இவ்வேளை சாரதியும் நடத்துனரும் இணைந்து நீண்ட தூரம் பயணிகளை கருத்திற்கொள்ளாது அதிகளவான வெங்காய மூடைகளை ஏற்றி பேருந்தில் பயணித்த மற்றுமொரு பயணியின் பேரில் பொதி ரீக்கட்டை எடுத்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் பயணத்தின் இடைநடுவே அதிகளவான பயணிகள் வெங்காய வாடையினாலும் மூச்சு எடுக்க முடியாமலும் சிரமப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்தும் சாரதி நடத்துனர் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்ததுடன் இறுதியாக கல்முனை சந்தைக்குள் பேருந்தை செலுத்தி சென்று வெங்காய மூடைகளை வெற்றிகரமாக இறக்கி 20 நிமிடங்களுக்கு பின்னரே அதிகாலை 5 மணிக்கு பயணத்தை தொடர்ந்துள்ளனர்.
பேருந்தில் இவ்வெங்காய மூடைகளை ஏற்றிய வேளை 1000 ரூபா வெங்காய மூடை உரிமையாளரிடம் இருந்து அறவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த உரிமையாளர் மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவையை சரக்கு ஏத்தும் பேருந்தாக மாற்றி சென்றுவிட்டார்.