முள்ளிவாய்க்காலில் எரிந்த புலனாய்வுத்துறையின் தடயப்பொருட்கள்!

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையினரின் நாளாந்த பணிப்பதிவேடுத் தடயம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தமது இரகசிய ஆவணங்கள் அனைத்தையும் எரித்து அழித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் பல்வேறு எரிந்த தடயங்களுடன் புலனாய்வுத்துறையின் நாளாந்த பணிப்பதிவேடுத் தடயம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
“புலனாய்வாளர்களே உங்களுடைய பணிகளின் வாய்பேச்சு பெறுபேறுகள் எத்தனை நாள் நினைவில் நிற்கும். எழுதப்படும் அறிக்கைகளே காலம் கடந்தும் உங்களை நினைவுபடுத்தும்” என்று அதில் எழுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.