SuperTopAds

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது! - ஜனாதிபதி கைவிரிப்பு

ஆசிரியர் - Admin
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது! - ஜனாதிபதி கைவிரிப்பு

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு தற்­போது மன்­னிப்பு வழங்­கு­வது கடி­னம். இவர்­க­ளில் பெரிய குற்­றங்­க­ளைப் புரிந்­த­வர்­களை எந்­தக் கார­ணம் கொண்­டும் விடு­விக்­க முடி­யாது என்று தெரி­வித்­துள்ள ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஞான­சார தேர­ரை­யும் தமிழ் அர­சி­யல் கைதி­க­ளை­யும் ஒப்­பிட முடி­யாது என்­றும் காட்­ட­மா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.     

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்­டுக்­கா­கக் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பொது­ப­ல­சேனா அமைப்­பின் பொதுச் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­மன்­னிப்பு வழங்கி அவரை விடுத்­துள்­ளார்.

ஞான­சார தேர­ருக்­குப் மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்ய முடி­யு­மா­யின் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் கைதாகி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் இளை­ஞர்­களை ஏன் விடு­தலை செய்­ய­மு­டி­யாது? என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா, சபை­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற அவ­ச­ர­கா­லச் சட்ட நீடிப்பு விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போது கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.

இது தொடர்­பில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பா­ல­வி­டம் செய்தி நிறு­வ­னம் ஒன்­றின் கொழும்­புச் செய்­தி­யா­ளர் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

பொது­ப­ல­சேனா அமைப்­பின் பொதுச் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் பயங்­க­ர­வாதி அல்­லர். அவர் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் கைது ­செய்­யப்­பட்­ட­வ­ரும் அல்­லர். நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­தார் என்ற குற்­றச்­சாட்டே அவர் மீது முன்­வைக்­கப்­பட்டு சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. நான், எனது அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி அவ­ரைப் மன்­னிப்­பில் விடு­தலை செய்­த­தில் தவ­றே­தும் இல்லை.

ஆனால், சிறைச்­சா­லை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மற்­றும் தண்­டனை அனு­ப­வித்­து­வ­ரும் அர­சி­யல் கைதி­கள் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் கைது­ செய்­யப்­பட்­ட­வர்­கள். அவர்­க­ளுக்­குத் தற்­போ­தைய நில­மை­யில் மன்­னிப்பு வழங்­கு­வது கடி­னம்.

ஞான­சார தேர­ரைப் மன்­னிப்­ப­ளித்து விடு­விக்­கு­மாறு பௌத்த மத பீடங்­கள், சிவில் அமைப்­பு­கள் உள்­ப­டப் பல்­வேறு தரப்­புக்­க­ளும் என்­னி­டம் கோரி வந்­தன. அதற்­க­மைய அவ­ருக்கு நான் மன்­னிப்பு வழங்­கி­னேன். விடு­த­லை­யா­ன­வு­டன் அவர் தனது தாயா­ரு­டன் என்னை வந்து நேரில் சந்­தித்து நன்றி தெரி­வித்­தார். அவ­ரின் தாயா­ரும் எனக்கு நன்றி தெரி­வித்­தார்.

இந்­தச் சந்­திப்­பின்­போது பல விட­யங்­களை நான் தேர­ரி­டம் கூறி­யுள்­ளேன். மன்­னிப்­பில் விடு­விக்­கப்­பட்­ட­வர்­கள் மீண்­டும் குற்­ற­மி­ழைத்­தால் அது மன்­னிக்க முடி­யாத பெரிய குற்­ற­மா­கக் கரு­தப்­ப­டும் என்று அவ­ரி­டம் நான் நேரில் தெரி­வித்­துள்­ளேன்.

ஞான­சார தேர­ரு­டன் அர­சி­யல் கைதி­களை ஒப்­பிட வேண்­டாம். இவர் செய்த குற்­றம் வேறு. அவர்­கள் மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றம் வேறு. இரண்­டை­யும் ஒப்­பிட வேண்­டாம். தற்­போது 200 இற்கு உட்­பட்ட அர­சி­யல் கைதி­கள்­தான் நாட்­டில் உள்ள சிறைச்­சா­லை­க­ளில் உள்­ள­னர். ஏனை­யோர் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர். தற்­போது சிறை­க­ளில் உள்ள அர­சி­யல் கைதி­க­ளில் குற்­ற­வா­ளி­க­ளும் உள்­ள­னர்; சந்­தே­க­ந­பர்­க­ளும் உள்­ள­னர்.

குற்­ற­வா­ளி­கள் தண்­ட­னையை அனு­ப­விக்­கின்­றார்­கள். சந்­தே­க­ந­பர்­கள் நீதி­மன்­றங்­க­ளில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு வழக்கு விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இவர்­கள் அனை­வ­ரி­ன­தும் விடு­தலை விவ­கா­ரம் தொடர்­பில் நாம் உயர்­மட்ட பேச்­சுக்­க­ளைத் தொடர்ந்து நடத்தி வரு­கின்­றோம்.

நாட்­டில் மீண்­டும் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் இடம்­பெற்­றுள்ள நிலை­யில் இவர்­க­ளுக்­குத் தற்­போது மன்­னிப்பு வழங்­கு­வது கடி­னம். அதே­வேளை, இவர்­க­ளில் பெரிய குற்­றங்­க­ளைப் புரிந்­த­வர்­களை எந்­தக் கார­ணம் கொண்­டும் விடு­விக்­க­வும் முடி­யாது. இது­தான் உண்மை நில­வ­ரம். ஆனால், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை விவ­கா­ரம் தொடர்­பில் நாம் தொடர்ந்து உயர்­மட்­டப் பேச்­சுக்­களை நடத்­து­வோம். அவர்­களை வைத்து எவ­ரும் அர­சி­யல் செய்ய வேண்­டாம் எனப் பணி­வு­டன் கேட்­டுக்­கொள்­கின்­றேன் என்­றார்.