SuperTopAds

வடக்கு அரசியல்வாதிகள் ஆதரவு தருவதில்லை..! வருத்தப்படுகிறாா் ஆளுநா் சுரேன்.

ஆசிரியர் - Editor I
வடக்கு அரசியல்வாதிகள் ஆதரவு தருவதில்லை..! வருத்தப்படுகிறாா் ஆளுநா் சுரேன்.

ஆளுநராக பதவியேற்றதன் பின்னா் வடக்கில் நான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் ஆதரவு வழங்குவதில்லை. என ஆளுநா் சுரேன் ராகவன் வருத்தம் தொிவித்துள்ளாா். 

வடமாகாண முதலமைச்சா் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொி விக்கும்போதே ஆளுநா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

வடக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்படட பின்னர் நான் பல அபிவிருத்தி திட்ட்ங்களை முன்னெடுத்து வருகின் றேன். ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் அதற்கு ஒத்துழைப்போ அல்லது எனக்கு பக்கபலமாக இருந்து 

பணியாற்றும் மனோ நிலையில் இல்லை. குறிப்பாக வடக்கில் நீர்ப்பிரச்சனை முக்கிய பிரச்சனையாக உள்ளது.அதில் யாழ்ப்பாணத்தில் வடமராட்ச்சியில் குளம் ஒன்றை அமைத்து நீரை சேமிக்க திடடமிடப்பட்டு வருகிறோம்.

எப்படியாவது இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண் டு ஆரம்பத்தில் அதனை நிறைவு செய்து நீரை சேமிக்க முயற்சி எடுத்து வருகின்றேன். ஆனால் அந்த திடடம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை இங்குள்ள அரசியல்பவாதிகளில் 

ஒருவர் கூட என்னுடன் இது தொடர்பாக கதைக்கவில்லை. மக்களின் வாக்குகளை பெற்று வந்த மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலனில் அக் கறை இன்றி செயற்படுகின்றனர்.

நான் அரசியலவாதி அல்ல. இங்குள்ள அரசியல்வாதிகள் இந்த திடடம் தொடர்பில் என்னுடன் பேசி அவர்களும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

இதேபோல அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று  பல நடவடிக்கைகளை அவர்களின் விடுதலைக்காக எடுத்திருந்தேன்.

ஆனால் அவர்களும் அவர்கள் குடும்பத்திரனாரும் இன்றுவரை ஓர் நன்றி என்ற வார்த்தை கூட எனக்கு சொல்லவில்லை. நாட்டில் ஏற்படட அசாதாரண சூழ்நிலைகளை அடுத்தது அனைத்து இடங்களிலும் 

பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.எனினும் எமக்கு இதுவரை 4 மொடடைக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றன. 

அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் அவற்றில் குறிப்பிடப்படட இடங்களுக்கு நாம் பாதுகாப் பினை வழங்கியுள்ளோம். இவ்வாறு மொடடைக் கடிதங்களை எழுதுபவர்கள் மிக விரைவில்  கைது செய்யப்படுவார்கள்.

அவர்களுக்கு அதிகபட்ஷ தண்டனையை நாம் பெற்றுக்கொடுப்போம்.எனவே மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதுகாப்பு தொடர்ப்பான விடய த்தில் குந்தகம் ஏற்படுத்துவதை நிறுத்துங்கள் என்றார்.