சுவிஸ் நாட்டின் தகவல் தொடா்பாடல் செயலியை பயன்படுத்திய தீவிரவாதிகள்..!

ஆசிரியர் - Editor I
சுவிஸ் நாட்டின் தகவல் தொடா்பாடல் செயலியை பயன்படுத்திய தீவிரவாதிகள்..!

“த்திாிமோா்” என்ற தகவல் பாிமாற்று செயலியை பயன்படுத்தியே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் தொடா்பான தகவல்களை பாிமாறியுள்ளதாக இலங்கை புலனாய்வுதுறை கண்டுபிடித்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு தொடர்புடைய தற்கொலை குண்டுத்தாரிகள், சுவிட்சர்லாந்தின் “த்ரிமோர்” என்ற தகவல் பறிமாற்றும் தொழில்நுட்ப செயலியை பயன்படுத்தி 

தகவல்களை பரிமாற்றியதாக புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவலை இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க உறுதி செய்துள்ளார். இந்த த்ரிமோர் செயலியிலுள்ள தொழில்நுட்பத்திற்கமைய 

அதில் தகவல் அனுப்புபவரும் தகவல் பெறுபவரும் மாத்திரேம அறிந்து கொள்ள முடியும் என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த த்ரிமோர் செயலியையே பயன்படுத்தி 

வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் சட்டத்திட்டங்களின் கீழ் த்ரிமோர் செயலி இயங்குவதாக சூரிச் நகரில் இயங்கும் த்ரிமோர் நிறுவனத்தின் பேச்சளார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

த்ரிமோர் செயலி ஊடாக பறிமாற்றப்படும் தகவல்களை இராணுவ புலனாய்வு சேவையினால் ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாதென புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு