றிஷாட்டையும், ஹிஷ்புல்லாவையும் விசாாியுங்கள்..!பதவிகள், அதிகாரங்களை இடைநிறுத்துங்கள்..! ஆனந்தன் காட்டம்..

ஆசிரியர் - Editor I
றிஷாட்டையும், ஹிஷ்புல்லாவையும் விசாாியுங்கள்..!பதவிகள், அதிகாரங்களை இடைநிறுத்துங்கள்..! ஆனந்தன் காட்டம்..

கிழக்கு ஆளுநா் ஹிஸ்புல்லா மற்றம் அமைச்சா் றிஷாட் ஆகியோாின் பதவிகள், அதிகாரங்கள் இடைநிறுத்தப்பட்டு இருவரும் விசாாிக்கப்படவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றில் கோாிக்கை விடுத்துள்ளாா். 

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக முக்கியமாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உட்பட கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் இன்னுமொரு ஆளுநர் ஆகியோர் மீது பரவலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

இவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறன. ஆகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஆளுநர்களினதும் அமைச்சர்களினதும் பதவிகளை முதலாவது இடை நிறுத்தி, உரிய முறையில் விசாரணை செய்ய வேண்டும்.

பொலிஸ் மற்றும் நீதித்துறை ஆகியன உள்ளது. இவர்கள் இந்த தாக்குதல்களுடன் தொடர்புப்பட்டிருக்கின்றார்களா? இல்லையா என்பதை உரிய முறையில் இவர்களுடைய பதவி நிலைகளை இடை நிறுத்தி விசாரணை செய்யாமல், 

வெறுமனே இந்த அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என்பது ஒரு கண்துடைப்பாகும்.

ஜனாதிபதியை பொறுத்தவரையிலே அவர் தன்னுடைய இரண்டு ஆளுநர்களை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பிரதமரை பொறுத்தவரை அமைச்சரை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

ஆகவே ஜனாதிபதியும், பிரதமரும் இந்த தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கைகளை அறிந்தும் அதில் எந்த விதமான கவனத்தையும் செலுத்தாததோடு மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் என்கின்ற ஒரு போலியான நாடகம் ஒன்று நடைபெற இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு