நம்பிக்கை இல்லா பிரேரணையினால் நடுங்கிபோயிருக்கும் றிஷாட்..! ஆதரவளிக்குமா கூட்டமைப்பு.
அமைச்சா் றிஷாட் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பை கோாியிருக்கின்றாா்.
இந்நிலையில் ஆராய்ந்து பாா்த்து தீா்மானிப்போம் என அமைச்சா் றிஷாட் கூறியுள்ளபோதும் ஆதரவான நிலைப்பாட்டினையே கூட்டமைப்பு எடுக்கும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதேவேளை தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நேற்றுத் தொலைபேசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியுள்ளார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். “நான் இப்போது திருகோணமலையில் தங்கியுள்ளேன். கொழும்பு வந்ததும் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்
இது பற்றிப் பேசவுள்ளேன். அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி அதன் பின்னர் தீர்மானம் தொடர்பில் ஒரு முடிவை எடுப்போம். அதன்பின்னர் உங்களுடன் நான் பேசுகின்றேன்.”
என்று அவருக்குப் பதிலளித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்களின்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில்
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அந்தக் கட்சி எடுக்கும் என்று அறிய முடிகின்றது.