படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மிருசுவில் புனித நிக்ளஸ் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு..! ஆளுநா் கலந்து கொண்டாா்.

ஆசிரியர் - Editor I
படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மிருசுவில் புனித நிக்ளஸ் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு..! ஆளுநா் கலந்து கொண்டாா்.

உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 1 மாத நிறைவை ஒட்டி யாழ்.மிருசுவில் புனித நீக்ளஸ் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. 

இந்த வழிபாட்டில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக 

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு 

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கோரி இருந்தார். அந்நிலையில் இன்றைய தினம் சமய வழிபாட்டு தலங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு