SuperTopAds

139.38 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்.மாவட்டத்தில் வியத்தகு அபிவிருத்திகள்..!

ஆசிரியர் - Editor I
139.38 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்.மாவட்டத்தில் வியத்தகு அபிவிருத்திகள்..!

யாழ்.மாவட்டத்தில் அதி உயர் பெறுபேறுகளைக் கொண்ட முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதில் குருநகர் மீன்பிடி துறைமுக நங்கூரமிடும் தளம் அபிவிருத்தி, யாழ்.அருணோதயா கல்லூரி அபிவிருத்தி வேலைத்திட்டம், தொல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கான அவசர உபகரண தேவைகளை 

பூர்த்தி செய்யும் வேலைத்திட்டம் மற்றும் யாழ் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற கட்டடத் தொகுதிகளும் இளைஞர் ஆளுமை விருத்திக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உள்ளடங்குகின்றன என தேசிய கொள்கைகள், 

பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் , வே.சிவஞானசோதி தொரிவித்தார்.

யாழ் மாவட்டத்தின் யாழ் பிரதேச செயலக பிரிவின் கீழ் அமைந்துள்ள குருநகர் மீன்பிடித்துறை நங்கூரத் தளமானது 3117 கடற்றொழிலாளர் குடும்பங்களை உள்ளடக்கிய 10760 அங்கத்தவர்களைக் கொண்ட கடற்தொழில் மையமாகவும் 

இதில் 90 மூமான மக்களின் வாழ்வாதாரம் கடற் தொழிலை மையமாகக் கொண்டுள்ளது. வருடாந்த மீன்பிடி உற்பத்தி 7390 மெற்றிக் தொன்களாகவூம் மேலும் 562 மெற்றிக் தொன் கருவாடு உற்பத்திகளைக் கொண்டதுமான 

ஒரு கடற்தொழில் பொருளாதார வலையமாகவும் காணப்படுகின்றது. 2000 க்கும் மேற்பட்ட ஒருநாள் படகுகளும் படகுகளின்; எண்ணிக்ககை அதிகமாக காணப்படுவதுடன் 500க்கும் மேற்பட்ட ரோலர் படகுகள் 

ஆழ்கடலை நோக்கி மீன்பிடிதுறையில் ஈடுபடுவதாகவூம் காணப்படுவதுடன் இத் துறையின் அபிவிருத்திக்கு கடற்கரை சார்ந்த மீன்பிடித் துறைக்கான வசதிகள் போதியளவு காணப்படாமையும் 

குறிப்பாக ஏலமிடும் அறை வலை பின்னும் நிலையம், குளிரூட்டல் வசதிகள், எரிபொருள் நிலையம்,படகுகள் திருத்தும் தொழிற் பட்டறைகள் போன்றவை காணப்படாதமை இத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய சவாலக அமைந்திருப்பதாக குருநகர் பிரதேச மீன்பிடித் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.

இக்கலந்துரையாடலின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சராகக் கொண்ட தேசியகொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு 

வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞா; விவகாரங்கள் அமைச்சினுடைய முன்னெடுப்பில் ஏலமிடும் கட்டடத்தொகுதி, எரிபொருள் நிலையம், வலைபின்னும் நிலையம் உற்பட சில உடனடி தேவைகளை நிறைவு செய்வதற்கு 

உடனடியாக 33.83 மில்லியன் ரூபா கிரயத்தில் இக்கருத்திட்டம் அனுமதிக்கப்பட்டு அமுலாக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக் கருத்திட்டம் மாவட்ட செயலாளர்; ஊடாக யாழ் பிரதேச செயலகத்தின் மூலம் அமுல்படுத்தப்படவுள்ளது.

தொல்லிப்பளை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள தொல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மேம்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு 56 மில்லியன் ரூபா நித ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் ைத்திய உபகரணங்களுக்கும், சத்திரசிகிச்சைப் பிரிவுமற்றும் நோயியல் ஆய்வுகூட புனரமைப்பு, குழந்தை பிரசவிப்புப் பகுதிக்கான வசதிகளும் விரிவாக்கப்படும், 

சாப்பாட்டு அறை அமைத்தல் மற்றும் நோயாளர் பிரிவு மகப்பேற்றுப் பிரிவு, பெண் நோயியல் பிரிவு உட்பட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட இளைஞர் ஆளுமை விருத்திக்கான கட்டடத் தொகுதிகளும் வசதிகளுக்குமான வேலைத்திட்டத்திற்கு ரூபா 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு இதில் தேசிய இளைஞர் 

சேவைமன்றத்திற்கான மாவட்ட அலுவலகம், இளைஞர் பயிற்சி நிலையம், இளைஞர் விளையாட்டுத்திடல், இளைஞர்களுக்கான உள்ளகபயிற்சி வசதிகள், இளைஞா; கலாச்சார மண்டபம் உள்ளடங்கலாக 11,000 இளைஞர்களுக்கு வசதிப்படுத்தும் வேலைத்திட்டமாக இது அமைவது குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்ட இவ் இளைஞர் ஆளுமை அபிவிருத்திக்கான கட்டடத் தொகுதியானது சண்டிலிப்பாய் பிரதேசசெயலகப் பிரிவில் அமையவுள்ளது என தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு,

வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்; வே.சிவஞானசோதி தொரிவித்தார்