கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மண்கும்பான் பகுதியில் கோர விபத்து, ஒருவர் பலி..! இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor
மண்கும்பான் பகுதியில் கோர விபத்து, ஒருவர் பலி..! இருவர் படுகாயம்..

யாழ்ப்பாணம் - பண்ணை வீதியில் -மண்டைதீவுச் சந்திக்கு அண்மையாக இன்று மாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மண்கும்பான் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்தது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாரதி உள்பட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


Radio
×