SuperTopAds

மருத்துவபீட மாணவா்களுக்கான அறிவித்தல்..!

ஆசிரியர் - Editor I
மருத்துவபீட மாணவா்களுக்கான அறிவித்தல்..!

யாழ்ப்பாண பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் முக்கியமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவக் கலாநிதி எஸ். ரவிராஜ் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வருமாறு :

மருத்துவ பீடத்தின் விடுதிகளில் தங்கியிருந்த சகல மாணவர்களுக்குமான விடுதி வசதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படும்.

39 ஆவது அணிக்கான முதலாவது மருத்துவ பட்ட பரீட்சைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. 

இந்தப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை 21 ஆம் திகதி முதல் மருத்துவ பீடாதிபதி அலுவலகத்தில் மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

40, 41 ஆம் அணிகளுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் ஜூன் 10 திகதி ஆரம்பமாகும்.

37, 38 ஆம் அணிகளுக்கான Pre-Professorial Clinical appointments மற்றும் கல்வி நடவடிக்கைகள் யாவும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெறும்.

36 ஆம் அணிக்கான Professorial Clinical appointments ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒழுங்கின் படி தொடரந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,

மருத்துவ பீட இணை மருத்துவ விஞ்ஞான அலகின் மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞானம், தாதியியல் மற்றும் மருந்தகவியல் துறைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் 

எதிர்வரும் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் எனவும், விடுதிகளில் தங்கியிருந்த 

இணை மருத்துவ விஞ்ஞான மாணவர்களுக்கான விடுதி வசதிகள் திர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் 

எனவும் மருத்துவ பீடாதிபதி மேலும் அறிவித்துள்ளார்.