முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் பிரதான உணவான உப்பில்லா கஞ்சியை வாங்கி குடித்த இராணுவம்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் பிரதான உணவான உப்பில்லா கஞ்சியை வாங்கி குடித்த இராணுவம்..

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தகாலத்தில் இயலாமையினால் மக்களின் பிரதான உணவான உப்பில்லாத கஞ்சியை 10ம் ஆண்டு நினைவு நாளில் இராணுவத்தினா் பருகியிருக்கின்றனா். 

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (MSEDO) ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையில் முள்ளிவாய்க்கால் மண்னில் இறுதி யுத்தத்தின் போது உண்ட உப்பில்லா கஞ்சி 

அந்த மக்களை நினைவுபடுத்தும் முகமாக வழங்கப்பட்டது. மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் பொது மக்கள் அனைவருக்கும் கஞ்சி வழங்கப்பட்ட துடன் பாதிக்கப்பட்ட மக்கள் நினைவாக 

மன்னார் சாந்திபுரம் பாடசாலை மற்றும் ஈச்சலவாக்கை பொது மண்டபம் பகுதியில் மரம் நாட்டியும் வைக்கப்பட்டது. இறுதி யுத்தத்தில் தனது 4 பிள்ளைகளை இழந்த தாய் ஈச்சளவாக்கை பகுதியில் இறந்த 26 பேரின் நினைவாக ஆலயபகுதியில் 

மரக்கன்றை நட்டிவைத்தார் வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதும் படசாலைகள், பொது இடங்கள், ஆலயங்கள் என தெரிவு செய்யப்படட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களின் நினைவாக 

என சுமார் 5000 மரக்கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது அவ்வீதியால் வாகனத்தில் சென்ற இராணுவத்தினர் மறிக்கப்பட்டு அவர்களுக்கும் உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது. 

அவர்களும் அதனை அவ்விடத்தில் நின்று குடித்து சென்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு