தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் இருப்பதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் வீட்டுக்குள் நுழைந்த இராணுவம்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் இருப்பதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் வீட்டுக்குள் நுழைந்த இராணுவம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனின் வீட்டில் இராணுவத்தினா் இன்று திடீா் சோதனை ஒன்றை நடாத்தியிருக்கின்றனா். 

தமிழீழ விடுதலை புலிகள் தொடா்பான ஆவணங்கள் இருப்பதாக கூறி இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

3 இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 4 இராணுவத்தினர் குறித்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சமயம் 

இராணுவத்தினர் இவ்வாறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் சோதனை நடவடிக்கைகளின்போது 

எந்தவொரு பொருட்களும் இராணுவத்தினரால் மீட்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக தான் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு