டாங்கிகளின் உதவியுடன் தண்டவாளத்தில் அமா்த்தப்பட்ட புகைரதம்..! வேடிக்கை பாா்த்த பெருமளவு மக்கள்..

ஆசிரியர் - Editor I
டாங்கிகளின் உதவியுடன் தண்டவாளத்தில் அமா்த்தப்பட்ட புகைரதம்..! வேடிக்கை பாா்த்த பெருமளவு மக்கள்..

#டாங்கி மூலம் இழுத்து தண்டவாளத்தில் ஏற்றப்பட்ட ரயில் இன்ஜின்.

கொழும்பில் இருந்து எரிபொருட்களுடன் அநுராதபுரம் நோக்கிச் சென்ற ரயில் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை அநுராதபுரம் சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

எரிபொருள் கொள்கலனை இணைத்து பயணித்த class M4 locomotive மற்றும் class M9 872 locomotive தண்டவாளத்தின் தடுப்பை உடைத்து தரையில் பாய்ந்தன M9 872 locomotive சில்லு நிலத்தில் புதைந்துவிட்டது . 

இதனால் தண்டவாளத்தில் ஏற்ற வேறு இன்ஜினால் இழுத்து ஏற்ற முடியவில்லை. இந்நிலையில் இராணுவத்தினரின் உதவி கோரப்பட்டது . இதையடுத்து இராணுவத்தினரின் டாங்கி கொண்டுவரப்பட்டு 

இன்று மாலை 4 மணியளவில் கேபிள் மூலம் இணைத்து ரயில் இன்ஜினை தண்டவாளத்தில் ஏற்றி வெற்றிகரமாக மீட்கப்பட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு