தெற்கு கடற்படைமுகாமை தாக்கிய டெங்கு..! அதிகளவான சிப்பாய்கள் பாதிப்பாம்..

ஆசிரியர் - Editor I
தெற்கு கடற்படைமுகாமை தாக்கிய டெங்கு..! அதிகளவான சிப்பாய்கள் பாதிப்பாம்..

இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படை முகாமில் அதிகளான கடற்படை சிப்பாய்கள் டெங்கு காச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த நான்கு மாத காலப்பகுதியினுள் காலி மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று காரணமாக 1300க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய காலி தெற்கு கடற்படை முகாம் வளாகத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒருவார காலப்பகுதியினுள் டெங்கு குடம்பிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 

தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு