காச்சல், தலைவலி, வாந்தி, உடலில் சிவப்பு நிற தழும்புகள் இருந்தல் உடனடியாக வைத்தியசாலை செல்லுங்கள்..

ஆசிரியர் - Editor I
காச்சல், தலைவலி, வாந்தி, உடலில் சிவப்பு நிற தழும்புகள் இருந்தல் உடனடியாக வைத்தியசாலை செல்லுங்கள்..

கடுமையான காச்சல், தலைவலி, வாந்தி மற்றும் தோலில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு இலங்கை மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது நாட்டில் நிலவி வரும் காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவ கூடிய சாத்தியம் காணப்படுவதால் மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ்ப்பாணம், குருநாகல், 

கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயை பரப்ப கூடிய நுளம்பு வகையின் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை குறிப்பாக பாடசாலை, மதவழிபாட்டு தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களிலேயே 

காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இலங்கையின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு 

சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு