SuperTopAds

கைது செய்யப்பட்ட தீவிரவாத சந்தேகநபரை விடுதலை செய்ய படாதபாடு பட்ட றிஷாட்..! அம்பலமான உண்மை.

ஆசிரியர் - Editor I
கைது செய்யப்பட்ட தீவிரவாத சந்தேகநபரை விடுதலை செய்ய படாதபாடு பட்ட றிஷாட்..! அம்பலமான உண்மை.

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட தீவிரவாத சந்தேகநபரை விடுதலை செய்யுங்கள். என அமைச்சா் றிஷாட் 3 தடவைகள் தன்னிடம் கேட்டதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பகிரங்கமாக கூறியுள்ளதுடன், 

அமைச்சா் றிஷாட்டின் கோாிக்கையை தான் நிராகாித்ததுடன் ஒன்றரை வருடங்கள் கழித்து தொலைபேசி அழைப்பு எடுங்கள் அப்போது வேண்டுமானால் பாா்க்கலாம் என இராணுவ தளபதி பகிரங்கமாக கூறியுள்ளாா். இராணுவ தலமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவா் இவ்வாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், அமைச்சர் ரிஷாட் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்தார் என்றும் எனினும் அதனை அழுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் 

இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடுதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டரர். முதலில் தனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்றும் பின்னர் 3 தடவைகள் தொடர்புகொண்டு 

குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தாரென்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார்.எனினும் அப்போது அவர் குறிப்பிடும் நபர் குறித்து தன்னால் அறிந்துகொள்ள முடிந்ததால், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் 

அப்போது உங்களின் கோரிக்கையை தான் ஆராய்வதாக கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை ஊடகங்கள் பிரசுரித்ததை தான் அவதானித்ததாகவும் குறித்த அமைச்சர் தனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்ட போதிலும் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதோடு 

கோரிக்கையை மாத்திரம் முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளதென்றும் இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என தனக்கு தெரியாததோடு, அதனை கோரிக்கையாகவும் பார்க்கலாம், 

அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் தான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் விடுவிக்குமாறு கூறிய சந்தேகநபரின் பெயர் தனக்கு இப்போது நினைவில்லை என்றும் எல்லோரும் மொஹம்மட்களாக இருந்தமையினால், அவரின் உரிய பெயர் தனக்கு தெரியவில்லை 

என்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார்.