ஹூவாவேய் மீது இரட்டை தாக்குதல்!

ஆசிரியர் - Admin
ஹூவாவேய் மீது இரட்டை தாக்குதல்!

சிறப்பு அனுமதி பெறாமல் அமெரிக்க தொழில்நுட்பங்களை வாங்க தடை, அமெரிக்க தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகளில் தயாரிப்புகளை பயன்படுத்த தடை என, சீன நிறுவனமான ஹுவாவேய் மீது அதிபர் டிரம்ப் ஒரேநேரத்தில் இரட்டைத் தாக்குதலை தொடுத்துள்ளார். சீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகள் வழியாக ஊடுருவி அரசு, ராணுவம் மற்றும் நிறுவனங்களின் தகவல் தொடர்புகள் சீனாவால் இடைமறிக்கப்படலாம் என்ற அச்சம் அமெரிக்காவில் நிலவுகிறது.

இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் தொலைத்தொடர்பு கருவிகளை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில், தேசிய நெருக்கடி நிலையை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், ஹூவாவேய் மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை அதற்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்துள்ளது. இதன் மூலம், அமெரிக்க அரசின் சிறப்பு அனுமதியைப் பெறாமல், ஹூவாவேய் நிறுவனம் அமெரிக்க தொழில்நுட்பங்கள், கருவிகள், பாகங்களை வாங்குவதை தடை செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு