கிழக்கு ஆளுநாின் சா்ச்சைக்குாிய பல்கலைகழகம் தொடா்பாக விசேட குழு மட்டக்களப்பு பயணம்..!

ஆசிரியர் - Editor I
கிழக்கு ஆளுநாின் சா்ச்சைக்குாிய பல்கலைகழகம் தொடா்பாக விசேட குழு மட்டக்களப்பு பயணம்..!

கிழக்கு ஆளுநா் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைகழகம் தொடா்பாக ஆய்வுகளை நடாத்துவதற்காக நாடாளுமன்ற உயா்கல்வி ஆலோசனை குழு மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. 

குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தலைமையில் இக்குழுவினர் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளனர். 

அத்தோடு பல்கலைக்கழகம் குறித்து ஆராயவுள்ளனர்.அதன்பின்னர் ஆய்வறிக்கையை உயர் கல்வியமைச்சுக்கும் நாடாளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக 

குழுவின் தலைவர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.இந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா? 

பல்கலைக்கழகமானது உயர்கல்வி சட்டதிட்டங்களை மீறியுள்ளதா என்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது.

குறித்த பல்கலைக்கழகம் குறித்து தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி குழுவானது இவ்விடயம் குறித்து ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு